அண்ணாமலை பல்கலை 15ல், பட்டமளிப்பு விழா

சென்னை, 'அண்ணாமலை பல்கலையில், வரும், 15ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாமலை பல்கலையில், பட்டம், முதுநிலை மற்றும்
பிஎச்.டி., முடித்தவர்களுக்கான, 82வது பட்டமளிப்பு விழா, வரும், 15ல், பல்கலை வளாகத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், நேரடியாக பட்டம் பெறுவதற்கான தகுதிகள், பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பட்டம் பெற விரும்புவோர், வரும், 10ம் தேதிக்குள், தங்கள் விபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, பல்கலையின் பதிவாளர், ஆறுமுகம் அறிவித்துள்ளார்.