டெல்டாவை கதற வைத்த, 'கஜா' 12 நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது

சென்னை : தமிழக டெல்டா மாவட்டங்களை கதற வைத்த, 'கஜா' புயலின் ஆதிக்கம், 12 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்தது.
டெல்டா,கதற வைத்த,கஜா,12 நாள் ஆட்டம்,முடிவு


அரபிக்கடலில், நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்தது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை,நவ., 1ல் துவங்கியது. நவ., 8ல், தாய்லாந்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அந்த மானை கடந்தது.நவ., 10ல் காற்றழுத்த தாழ்வு மண்ட லம்,புயலாக மாறியது. இந்த புயலுக்கு, இலங்கை தேர்வு செய்த, யானை என பொருள் உடைய, 'கஜா' என்ற, பெயர் சூட்டப்பட்டது.

அப்போது,இந்திய பெருங்கடலின் தென்கிழக்கு பகுதியில், 'போச்ரா' என்ற புயலும், தென்மேற்கு பகுதியில், 'அல்சிட்' என்ற புயலும், சுழன்று கொண்டு இருந்தன. இதனால், கஜா புயல் நகர முடியா மல் திணறியது.'போச்ரா, அல்சிட்' புயல்கள்,14ம் தேதி வேறு பகுதிகளுக்கு நகர்ந்ததை தொடர்ந்து, கஜாவின் வேகம் அதிகரித்தது. இறுதியாக, நவ., 15 நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தீவிர புயலாக, கஜா கரை கடந்தது.

மணிக்கு, 165 கி.மீ., வேகத்தில், சூறாவளியுடன் சுழன்ற புயல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை பதம் பார்த்தது. அங்கிருந்து, சிவகங்கை, மதுரை வாடிபட்டியை தாண்டி, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் வழியாக, கேரளாவுக்குள் நுழைந்தது.சென்ற இடம் எல்லாம், சூறாவளி காற்றை வீசிய கஜா, கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளையும் பதம் பார்த்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அரபிக்கடலில் நுழைந்தது. மூன்று நாட்களாக அரபிக்கடலில் சுழன்று, சோமாலியா நோக்கி பயணம் செய்தது.

இந்நிலையில், வடகிழக்கு காற்றின் வேகம் குறைந்ததால், நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்தது. இன்று, வெறும் வளிமண்டல சுழற்சியாக வலு குறைந்து, கடலில் கஜா கரைந்து விடும் என, வானிலை மையம் கணித்துள்ளது.

நவ.,8 முதல்,கஜா தோற்றம் முதல், அதன் தாக் கம் வரை,இந்திய வானிலைஆய்வு மையம் கண்காணித்து வந்தது. கஜா புயலின் சீற்றம் முற்றிலுமாக முடிந்து விட்டதால்,கஜாவை பின் தொடரும் வானிலை கண் காணிப்பு அறிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.