கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம்: தமிழக அரசு கணக்கிட்டிருப்பதாக தகவல்

சென்னை: கஜா புயலால் தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம்
ஏற்பட்டிருக்கலாம் என்று தமிழக அரசு கணக்கிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிவாரணப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடியை தமிழக அரசு விடுவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சேத மதிப்புகளும் கணக்கிடப்பட்டு வருகிறது. அதில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு கஜா புயலால் சேதம் அடைந்திருக்கலாம் என்று தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.