School Morning Prayer Activities - 04.10.2018



Related image

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
 
பழமொழி :
Brevity is the soul of wit
சுருங்க சொல்லுதல் அறிவின் அடையாளம்
பொன்மொழி:
கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்
-கிளெண்டல்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
 
பொது அறிவு :
1.ஜப்பானின் தலைநகர்?
டோக்கியோ
2.பாகிஸ்தானின் தலைநகர்?
இஸ்லாமாபாத்
நீதிக்கதை
சிங்கமும் நரியும்:
ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தத்தமது நிலைமையை புலம்பிக் கொண்டன.
இறுதியாக இரண்டும் சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன. அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது. அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடும். அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல வேண்டும்.
இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது. அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் வேகமாக ஓடின. அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது.
ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின் பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன. அதைப் பார்த்ததும் நரி, தான் அகோரமாகக் கத்தியதால்தான் இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது.
சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்.. நான் கத்தியே இத்தனை மிருகங்களை கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது.
அதற்கு சிங்கம்.. ஆமாம்.. உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன் என்று பாராட்டியது.
 
இன்றைய செய்தி துளிகள்:
1. அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ மாணவிகள் 02.10.2018 முதல் 08.10.2018 முடிய'oy of Giving Week' கொண்டாட வேண்டும் - இயக்குநர் உத்தரவு!!


2.அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை

பள்ளிகளில் சீருடை மாற்றம் - பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு!

3.2018-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு
4.சிறந்த வீரர், பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் விளையாட்டு விருது: விண்ணப்பிக்க அழைப்பு
5.யு-19 ஆசிய கோப்பை அரை இறுதியில் இந்தியா: லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றி