கலாம் நினைவகத்தில் அண்ணன் பிரார்த்தனை

 கலாம் நினைவகத்தில் அண்ணன் பிரார்த்தனைராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி
அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் நினைவகத்தில் மூத்த அண்ணன் துஆ பிரார்த்தனை செய்து, அஞ்சலி செலுத்தினார்.நேற்று அப்துல்கலாம் 87 வது பிறந்த தினத்தையொட்டி, ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்னுமிடத்தில் உள்ள கலாம் நினைவகத்தில் அவரது மூத்த சகோதரர் முத்துமீரா மரைக்காயர், அவரது மகன் ஜெய்னுலாபுதீன், மகள் நஜீராபேகம், உறவினர்கள், ராமேஸ்வரம் ஜமாத் நிர்வாகிகள், தாய்தமிழ் அறக்கட்டளை இயக்குனர் பழனிச்சாமி மற்றும் பலர் காலை 9:00 முதல் 9:15 மணி வரை துஆ செய்தனர். கலாம் சமாதியில் அவரது அண்ணன் மலர் துாவி அஞ்சலினார்.பின், கலெக்டர் வீரராகவராவ், நடிகர் தாமு, கலாம் நண்பர் டாக்டர் விஜயராகவன், சென்னை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அதிகாரி போஸ், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.