புதுடில்லி: 'வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில், ஆதார் அட்டை வழங்கும்
பணி, தொடர்ந்து நடக்கும்' என, அடையாள அட்டை வழங்கல் ஆணையம்
அறிவித்துள்ளது.இந்திய அடையாள அட்டை வழங்கல் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாடு முழுவதும், 13 ஆயிரம் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில், ஆதார் அட்டை வழங்குவது மற்றும் தகவல்களில் மாற்றம் செய்யும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.'வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டிய அவசியமில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தாலும், 'பான் கார்டு' மற்றும் அரசு சலுகைகள் உட்பட, இதர சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியமாகிறது.இதை மனதில் வைத்து, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஆதார் அட்டை வழங்கும் பணியை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.