நேர்மையான மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் கடமை தினமலர் விருது வழங்கும் விழாவில் சி.இ.ஓ., கோபிதாஸ் பேச்சு

''ஆரோக்கியமான சமுதாயம் உருவாக நேர்மையான மாணவர்களை உருவாக்கும் கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது,'' என தினமலர் லட்சிய ஆசிரியர்' 2018 விருது வழங்கும் விழாவில் மதுரை முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் பேசினார்.தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார். தினமலர் இயக்குனர் டாக்டர் எல்.ராமசுப்பு முன்னிலை வகித்தார்.


முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் பேசியதாவது:ஆசிரியர் பணி என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. இப்பணி கிடைத்தவர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க வாய்ப்பு கிடைத்ததாக நினைத்து பணியாற்ற வேண்டும். முன்னுதாரணம் மற்றும் அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்கள் தான் நேர்மையான மாணவர்களை உருவாக்க முடியும்.நேர்மையான மாணவர்களால் தான் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். 

பணிக்கு அப்பாற்பட்டு ஆத்ம திருப்திக்காக பணியாற்றும் பல ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்கள் பின்பற்றும் ஆசிரியர்களாக மாற வேண்டும்.தினமலர் நாளிதழ் மாணவர்கள் நலன் கருதி ஜெயித்துக்காட்டுவோம், வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்துவது, பொதுத் தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் வெளியிடுவதன் மூலம் கல்வித்துறைக்கு ஆற்றும் பணியை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: தினமலர் எப்போதும் உண்மையின் பக்கம் தான் நிற்கும். உண்மையின் உரைகல் என்று சொல்வது அதனால் தான். கல்வித்துறையில் ஊழல்கள் பெருகிவிட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு நேர்மை, ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பதை ஆசிரியர்கள் முக்கிய நோக்கமாக கொள்ள வேண்டும்.வேலைவாய்ப்பு வழங்கும் பாடங்களை கற்பிக்க வேண்டும். வேலைக்கு தகுதியில்லாத கல்வியால் பயனிருக்காது. வேலையில்லாத இளைஞர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவர். மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு பெரும்பங்கு உண்டு என்றார்.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 28 ஆசிரியர்களுக்கு லட்சிய ஆசிரியர் விருதுகளை கோபிதாஸ் வழங்கினார்.

1. மாலா பரமேஸ்வரன், முதுநிலை ஆசிரியை, செயின்ட் ஜோசப் மெட்ரிக்  மேல்நிலை பள்ளி, மதுரை. 
2. மு.சுலைகாபானு, ஆசிரியை, ராஜம் வித்யாலயம் நடுநிலை பள்ளி, மதுரை. 
3. ப.பாஸ்கரன், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி, மாயாண்டிபட்டி,மதுரை.
4. வே.மதன்பிரபு, தலைமையாசிரியர், நாடார் சரஸ்வதி தொடக்க பள்ளி, உசிலம்பட்டி. 
5. சே.கவுரி மீனாட்சி, ஆசிரியை, அரசு உயர்நிலை பள்ளி, சிறுவாலை, மதுரை. 
6. அ.ஜான் பெலிக்ஸ் கென்னடி, ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, கீரனுார்.
7. வெ.முருகேசன், உதவி தலைமையாசிரியர், தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி,  சின்னாளப்பட்டி 
8. ஜோ.ராஜலட்சுமி, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி,  கோணியம்பட்டி. 
9. ஆ.ஜேசுதாஸ், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அழகாபுரி. 
10. த.கவிதா, ஆசிரியை, ஹெச்.என்.யு.பி.ஆர்., பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  நிலக்கோட்டை. 
11. ப.மகாலட்சுமி, ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, நத்தம். 
12. எஸ்.லதா, பட்டதாரி ஆசிரியை, காந்திஜி வித்யாபீடம் மேல்நிலை பள்ளி,  கன்னிசேர்வைபட்டி. 
13. கோ.செந்தில்குமார், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி, அல்லிநகரம். 
14. சு.ராம்சங்கர், தலைமையாசிரியர், டிரயம்ப் நடுநிலைப் பள்ளி, பெரியகுளம்.
15. சு.சரவணன், ஆசிரியர், இந்து நடுநிலைப் பள்ளி, சீலையம்பட்டி. 
16. அ.டாலின் ஆரோ பிரியா, இடைநிலை ஆசிரியை, மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, மேட்டுக்காரான். 
17. ச. உமா மகேஸ்வரி, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,புதுப்பட்டி. 18. யா.சாம்ராஜ், முதுகலை ஆசிரியர், ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருப்பத்துார். 
19. சி.மோகன், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கட்டுக்குடிப்பட்டி. 
20. சி.தியாகராஜன், முதுகலை ஆசிரியர், வைரம் குரூப் மெட்ரிக் பள்ளி, தேவகோட்டை.
 21. பா.செல்வம், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, இடைக்காட்டூர். 
22. தி.ராகவன், தலைமையாசிரியர், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  கல்லம்பட்டி. 
23. ம.ஜெயமேரி, ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, க.மடத்துப்பட்டி.
 24. து.சுதாகர், முதுகலை ஆசிரியர், ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகாசி. 
25. வெ.செங்கமலை நாச்சியார், தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வடமலாபுரம். 
26. சி.புளுகாண்டி, முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி வெம்பக்கோட்டை. 
27. க.சரவணக்குமார், ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வையம்பட்டி. 
28. க.கணேஷ்குமார், ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தேனுார்  கூவர்குளம்