கிட்னியில் கல் வருவதற்கு இதுதான் காரணமாம்

கிட்னியில் கல் வருவதற்கான காரணங்கள்:
இன்றைய காலகட்டத்தில் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வகையில் கிட்னியில் ஏற்படும் ஒரு பிரச்சனை 'கல்' சேர்ந்து விடுதல். இவ்வாறு கிட்னியில் கல் சேர்ந்து விடுவதால் சுரக்கும் கழிவுகள் சிறுநீரகப் பையில் தங்கி விடுகின்றன. வெளியேற்றும் இடத்தில் அடைத்து கொள்வதினால் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படுகின்றன. இதனால் பல நோய் தொற்றுகள் ஏற்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
கல்லை கரைப்பதற்கான வழி:
உங்களுக்கு கிட்னியில் கல் இருக்கிறது என்பது தெரிந்து விட்டால் ஆரம்ப நிலையிலேயே அதை மிக சுலபமாக ஆரோக்கியமான வழியில் குறைக்க முடியும். அது எப்படி என்று உங்களுக்கு சொல்கிறேன்.
அதாவது ஒரு காட்டு நெல்லிக்காய் உண்பதன் மூலம் ஒரு டம்ளர் பால் மற்றும் ஒரு ஆப்பிளுக்கு நிகரானது. அதுபோன்று ஜீரணத்திற்கு மிக உதவியாக இருப்பது மற்றும் தலைவலிக்கு இது நல்ல மருந்தாக விளங்கும் இஞ்சி.
மருந்து தயாரிக்கும் முறை:

இந்த இரு பொருளையும் அதாவது இரண்டு நெல்லிக்காய் மற்றும் சிறிதளவு இஞ்சி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பிறகு அவற்றில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும்.
அதனுடன் இன்னொரு டம்ளர் நீர் சேர்த்து மறுபடியும் நன்கு அரைக்க வேண்டும். இப்பொழுது அருமையான ஜூஸ் ரெடி ஆகிவிட்டது.
பருகும் முறை:
இவற்றை அப்படியே வடிகட்டி பருகலாம் அல்லது இதனுடன் ஐஸ் சேர்த்து பருகலாம். அதிகமாக தயார் செய்து அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து தினமும் குடித்து வந்தால் உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கல் சிறிது சிறிதாக கரைய ஆரம்பிக்கும் மற்றும் சிறுநீர் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன.