காய்ச்சலின் போது மறந்து கூட இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்

பொதுவாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது மருத்துவர்கள் பரிந்துரைப்பது
ஆவியால் வேக வைத்த உணவுகளைத் தான்.
துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்பட ஒருசில வகை உணவுகளை தவிர்க்க கூறுவார்கள். மேலும் அத்தகைய நோய்த் தொற்றிலிருந்து விடுபட மருந்துகள் மட்டுமின்றி உணவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
 
பால்
பால் நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரித்து மூக்கடைப்பு, மார்பு எரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பால் குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சி செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் வைரஸ் காய்ச்சலின் போது, சிவப்பு இறைச்சியை சாப்பிடக் கூடாது.
 
காரமான உணவுகள்
வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட போது கட்டாயம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளின் பட்டியலில் காரமான உணவுகள் முதலில் உள்ளது. எனவே காரமான உணவு வகைகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது.
பொரித்த உணவுகள்
காய்ச்சலில் இருக்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது உணவு செரிமானம் அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தி, வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் ஆற்றலை குறைக்கிறது.
சீஸ்
காய்ச்சலின் போது சீஸ் எனும் பாலாடைக்கட்டியை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதை சாப்பிடுவதின் மூலம் நுரையீரலில் அதிக சளி உற்பத்தியாகி, மார்பு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
 
டீ மற்றும் காபி
காய்ச்சலில் இருக்கும் போது கண்டிப்பாக டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதை குடிப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி உடலில் அதிக நீரிழப்பை ஏற்படுத்தும்.