கலை, அறிவியல் கல்லூரிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை

சென்னை: அனைத்து கல்லுாரிகளிலும், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவன
வளாகங்கள், பொது இடங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, ஜனவரி, 1 முதல், மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது.அதே நேரத்தில், அரசு பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யும் சட்டம், செப்டம்பர் முதல் அமலுக்கு வந்துள்ளது.பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மறுசுழற்சி இல்லாத, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளிலும், தற்போது அமலுக்கு வந்துள்ளது.இது குறித்து, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் ஆகியவற்றுக்கு, கல்லுாரி கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் தடை சட்டம் அமலாகியுள்ளதால், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன்களில் உணவு எடுத்து வரவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.