போலீஸ் தேர்வு பட்டியல் வெளியீடு

சென்னை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலீஸ், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை
காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என, 6,140 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, 2017ல் வெளியிடப்பட்டது. பின், 32 மையங்களில் எழுத்து தேர்வும், 15 மையங்களில் உடற்திறன் தேர்வும் நடந்தது.இதில், 5,531 பேர், மாவட்ட சேம நலப் படைக்கும்; 351 பேர், சிறைத் துறைக்கும்; 237 பேர், தீயணைப்பு துறைக்கும், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.