அனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும்

'தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, வகுப்புகள் நடத்தப் படுகின்றன. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் விடுமுறை விடப்படுகின்றன. சில வாரங்களில், சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டும், வேலை நாளாக அறிவிக்கப்படும். 


இதன்படி, இன்று சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும், பள்ளிகளின் வேலை நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், அனைத்து பள்ளிகளும் இன்று செயல்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.