போலி செய்திகளுக்கு பூட்டு கூகுள், பேஸ்புக், டுவிட்டர் முடிவு.!

போலி செய்திகளை எங்களுடைய தளத்தில் அனுமதிக்க போதில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரச்சாரம் செய்யபட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகின்றது.
 
இந்திய தேர்தலின் புனித்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு செயலுக்கும் தங்களுடைய தளங்களில் அனுமதிக்கப்படாது என கூகுள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் உறுதியளித்தாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கூறினார்.
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு வாக்குபதிவு முடிவடைவதற்கு முன் உள்ள 48 மணி நேரத்தில் வாக்காளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் எந்த தகவல்களும் அனுமதிப்படாது. மேலும், தேர்தல் விளம்பர செலவுகள் கண்காணிக்கப்படும் என்றும் பேஸ்புக், டுவிட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.