ATM -ல் இனி ரூ.20 ஆயிரம் தான் எடுக்கலாம்: இன்று முதல் SBI கட்டுப்பாடு

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும் புதிய நடைமுறை, இன்று (அக்.31-ம் தேதி) முதல் அமலாகிறது.


அதன்படி, ஒரு சில வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. 


இது குறித்து எஸ்.பி.ஐ கூறியுள்ளதாவது: .மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏ.டி.எம்.,களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.