தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்)
6–ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அதற்கு முந்தைய நாளான நவம்பர்
5–ந் தேதியை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் காரணமாக 5–ந் தேதி நடைபெற இருந்த
சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு 7–ந் தேதி நடைபெறும் என சென்னை
பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் அறிவித்தார்.