தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது வரும் நவமபர் மாதம் 6-ஆம் தேதியன்று (செவ்வாய்) கொண்டாடப்படுகிறது. அன்று எப்போதும் போல அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு விடுமுறை என்று தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் வரும் நவமபர் மாதம் 6-ஆம் தேதியன்று (செவ்வாய்) அரசு விடுமுறையாகும்.
ஆனால் தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்தும் வந்த கோரிக்கையினை அடுத்து, தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கபப்டுகிறது.
இதற்கு பதிலாக வரும் நவம்பர் 10-ஆம் தேதி வேலை நாளாக கருதபப்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.