வடகிழக்கு பருவமழை நாளை துவக்கம் தமிழகத்தில், அக்., 30க்கு பின் வாய்ப்பு

பருவமழை நாளை துவங்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதியாக அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்திற்கு, 30ம் தேதிக்கு பிறகே, அதிக மழை வாய்ப்பு
உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவமழை மே, 29ல் துவங்கி, அக்., 21ல் முடிந்தது. இதையடுத்து, வடகிழக்கு பருவமழை, அக்., 26ல் துவங்க சாதகமான சூழல் உள்ளதாக, வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.இதன்படி, தற்போது காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கில் இருந்து வீசும் காற்று நின்று, கிழக்கில் இருந்து காற்று வீச துவங்கியுள்ளது.இந்த காற்று, நாளுக்கு நாள் வலுப்பெறுவதால், ஏற்கனவே கணித்தபடி, நாளை வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.அந்த மையம் மேலும் கூறியுள்ளதாவது:இந்த முறை, பருவ மழை துவங்கியதும், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து, ஆந்திராவின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒடிசாவில் கனமழையாக பெய்யும்.இருந்தாலும், நாளை முதல் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. ஆனால், அக்., 30க்கு பின், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் அதிகபட்சம், 6 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.நாங்குநேரி, 5; பாபநாசம், சீர்காழி, செங்கோட்டை, போடி நாயக்கனுார், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.- நமது நிருபர் -'வடகிழக்கு