School Morning Prayer Activities - 04.09.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


 
திருக்குறள்:43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
உரை:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
பழமொழி :
Be friendly but not familiar
அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே
 

பொன்மொழி:
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
 - சாணக்கியர்.
இரண்டொழுக்க பண்பாடு :
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.
2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.
 

பொது அறிவு :
1.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
கன்னியாகுமரி
2.காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?
டாக்டர்.ராமச்சந்திரன்
 
நீதிக்கதை :
எறும்பும் வெட்டுக்கிளியும்
(Ant and Grasshopper - Aesop Moral Story)
மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.
அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம்இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமேஎன்றது.
அதற்கு எறும்புஇன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்என்றது.
வெட்டுக்கிளி எறும்பிடம்மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.
நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.
தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.
அப்போது வெட்டுக்கிளிக்குஎறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்என்ற எண்ணம் வந்தது.
வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம்எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.
தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்என்றது.
கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.
நீதி: கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.
 
இன்றைய செய்தி துளிகள்:
1.தமிழக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும் வகையில் ஒருங்கிணைத்த பண்ணையத்தை மேம்படுத்த தமிழக அரசு திட்டம்
2.தமிழகத்தில் 77% முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
3.கல்வி கடன் மானியம் பெற விண்ணப்பிற்க கடைசி நாள் - 28.09.2018 : மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
4.கேரளாவில் கடும் மழைப் பொழிவு குறித்து ஆகஸ்ட் மாதமே எச்சரிக்கை விடப்பட்டது: மத்திய புவி அறிவியல் துறை அதிகாரி
5.உலக சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி : மானாமதுரையை சேர்ந்த மாணவர்கள் தேர்வு