அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி பதிவேட்டை செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்: முதன்மைச் செயலர் சு.ஜவஹர்...!!

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய பணி பதிவேட்டை 


தங்களுடைய செல்லிடப்பேசியிலேயே பார்க்கமுடியும் என தமிழக அரசின் முதன்மைச் செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையருமான சு.ஜவஹர் தெரிவித்தார்.

தென்காசியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது.
 
 தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 9 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியம், 7 லட்சம் அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கி வருகிறோம்.
ஓய்வூதியர்களுக்காக பலசிறப்பு திட்டங்கள் உள்ளன.  ஏற்கெனவே இருந்த திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் 2018  அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 லட்சமாக இருந்த தொகை 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம்  முழுவதும் 7 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் என 12 லட்சம் பேர் பயனடைவர்.
கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலம் தமிழகம் முழுவதும் அனைத்துஅரசு திட்டங்களுடைய வரவு செலவுகளை 294 அலுவலகம் மூலம் செயல்படுத்தி வருகிறோம்.
சென்ற நிதியாண்டில் அரசின் செலவு 1 லட்சத்து 70ஆயிரம் கோடியாகும். முக்கிய செலவினம் என்பது அரசு ஊழியர்களுடைய மாத ஊதியம், ஓய்வூதியம், அரசின் நலத் திட்டங்களுடைய செலவு, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், சாலை வசதி, பொதுப்பணித்துறை கட்டடங்கள்கட்டுவது உள்ளிட்டவையாகும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுதிட்டத்தின் மூலம் 15 நிமிடத்தில் பணிகள் முடியும். காலையில் பில் மாலையில் பணம் என்பது தான் எங்கள் நோக்கம்.
 இத்திட்டத்தின் சிறப்பம்சம் தமிழக அரசில் பணியாற்றும்,  கருவூலம் மூலம் ஊதியம் பெறும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பணி பதிவேடு கணினி மயமாக்கப்படும். அதன் மூலம் பணி பதிவேடு தீ விபத்து, தொலைந்து விட்டது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும்.
தங்களுடைய பணி பதிவேடுகள் குறித்த விவரங்களை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களுடைய செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்.
அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உயரதிகாரிகளிடம் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பணி ஓய்வு நாளன்று அனைத்து சலுகைகளும், ஓய்வூதியத்துக்கான உத்தரவும் வழங்கப்படும் என்றா