மானியம் நிறுத்தப்பட்ட அரசு பள்ளிகள் மூடப்படுகிறதா?

தமி­ழகம் முழு­­தும் 15 மாண­வர்­­ளுக்கும் குறை­வாக மாண­­ர்கள் உள்ள 3 ஆயிரம் அர­சுப்­பள்­ளி­களுக்கு பரா­­ரிப்பு மானியம் நிறுத்­தப்­பட்­டுள்­ளதால் ஆசி­ரி­யர்கள் அதிர்ச்­சி அடைந்­துள்­­னர்.


 Image result for school closed images
எஸ்..பி. முழு சுகா­தாரத் தமி­ழகம் என்ற திட்­டத்தில் அர­சுப்பள்­ளி­­ளுக்கு ஒருங்­கி­ணைந்த மானி­யம் வழங்க இந்த ஆண்டு உத்­­­வி­டப்­பட்­டுள்­ளது.
*15 மாண­வர்­­ளுக்கு குறை­வாக உள்ள பள்­ளி­­ளுக்கு மானியம் கிடை­யாது. 15–100 மாண­வர்கள் உள்ள பள்­ளிக்கு 25 ஆயிரம் ரூபாய், 101–250 மாண­வர்கள் உள்ள பள்­ளிக்கு 50 ஆயி­ரம் ரூபாய், 251–1000 மாணவர்கள் உள்ள பள்­ளி­­ளுக்கு 75 ஆயிரம் ரூபாய், 1001க்கு மேல் மாண­வர்கள் உள்ள பள்­ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரா­­ரிப்பு மானியம் வழங்­கப்­­டு­கி­­து
 
*இத்­தொ­கையை கழிப்­பறைகள் சீர­மைப்­­பு, குடிநீர் வசதி, குடிநீர்த் தொட்டி பழுது பார்த்­தல், முட்­பு­தர்­களை அகற்­று­­தல், கல்வி, விளை­யாட்டு உபக­­ணங்­களை வாங்­குதல் உள்­ளிட்ட அத்­தி­யா­­சியப் பணி­­ளுக்கு செல­விட அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­­து. 2019ம் ஆண்­டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலவு, பயன்­பாட்டுச் சான்று அளிக்ககெடு விதிக்­கப்பட்­டுள்­­து
*மாண­­ர்கள் எண்ணிக்கை 15க்கு குறை­வாக உள்­ளதால் மாநிலம் முழு­வதும் 3 ஆயிரம் பள்­ளிக­ளுக்கு மானியம் வழங்­கப்­­­வில்லை
*இதனால் ஆசி­ரி­யர்கள் அதிர்ச்சி அடைந்துள்­ளனர். அந்­தப் பள்­ளி­கள் விரைவில்மூடப்­பட்டு விடும் என தகவல் பரவி வரு­கி­­து
*இதுகுறித்து தமி­ழ்­நாடு ஆரம்­பப்­பள்­ளி ஆசி­ரியர் கூட்­டணி, மாவட்­டச்­செ­­லாளர் பால்ராஜ், தலைவர் ராஜ்­குமார் கூறி­­தா­­து
*தமி­ழகம் முழு­வதும் 3 ஆயிரம் அர­சுப்பள்­ளி­­ளுக்கு பரா­­ரிப்பு மானியம் விடு­விக்­கப்­­­வில்லை
*நெல்லை மாவட்­டத்தில் 1,492 துவக்­கப்­பள்­ளிகள், 419 நடு­நி­லைப்­பள்­ளிகள் என மொத்தம் 1,911 பள்­ளிகள் உள்­ளன. அவற்றில் 70 க்கும் மேற்­பட்ட பள்­ளி­களில் 15 க்கும் குறை­வான மாண­வர்கள் உள்­ளனர்
*மானி­யம் விடு­விக்­கப்­­டாத 3 ஆயிரம் பள்­ளிகள் மூடப்­­டுமோ என கல்­வி­யா­ளர்கள் மத்­தியில் சந்­தேகம் எழுந்­துள்­ளது. மாண­வர்கள் எண்­ணிக்­கையை காரணம் காட்டி3 ஆயிரம் பள்­ளி­­ளுக்கு நிறுத்தி வைத்த மானி­யத்தை உடனே வழங்க வேண்­டும்**இவ்வாறு அவர்கள் கூறினர்.
நெல்லை மாவட்­டத்தில் 70க்கும் மேற்­பட்ட பள்­ளி­­ளுக்கு மானியம் நிறுத்­தப்­பட்­டுள்­ளதால் கிராமப்­­குதி மாணவ, மாண­விகள் பாதிக்­கப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­­து.