தலைமையாசிரியை காலில் விழுந்து வணங்கிய கலெக்டர்

தலைமையாசிரியை காலில் விழுந்து வணங்கிய கலெக்டர்  சேலம்: அரசு பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில், தலைமையாசிரியை காலில் விழுந்து கலெக்டர் வணங்கியதால் பரபரப்பு
ஏற்பட்டது.
சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் ரோகிணி, ஆசிரியர்கள், மாணவியருடன் சேர்ந்து கேக் வெட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் ரோகிணி, தலைமையாசிரியை தமிழ்வாணியின் காலில் விழுந்து வணங்கினார்.
பின் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:இன்று, நான் மேடையில் இருப்பதற்கு முழு காரணம் ஆசிரியர்கள்தான். மாணவியரான நீங்கள், நாளை மேடைக்கு வர காரணமாக இருப்பதும் அவர்களே. அதனால் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்ற முழு முயற்சி எடுக்க வேண்டும்.அதிக மதிப்பெண் பெற மட்டுமல்ல, நல்ல பழக்க வழங்கங்களை கற்றுக்கொள்ளவும் ஆசிரியர்கள் உதவுகின்றனர். அவர்களின் அறிவுரையை கேட்டு, சிறந்த முறையில் கல்வி கற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.நான், ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அரசு பள்ளியில்தான் படித்தேன். தாழ்வு மனப்பான்மை ஏதுமின்றி உயர் லட்சியத்துடன் தயாராவது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.