இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாம் சமைக்க பயன்படுத்தபடும் ஒவ்வொரு சமையல் பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.
அதுமட்டுமின்றி குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்திருக்கும் உணவுகளை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும், நாட்கள் செல்ல செல்ல விஷத் தன்மை நிறைந்ததாக கூட மாறிவிடலாம்.
தக்காளி
சிலர் தக்காளி எப்போது குளிர்ச்சியாகவும் புதிதாகவும் இருக்க வேண்டும் என நினைத்து அதை அடிக்கடி குளிர் சாதன பெட்டியில் வைத்து மூடிவிடுவார்கள். ஆனால், இவ்வாறு செய்தால் தக்காளி நன்றாக பழுப்பது பாதிக்கப்படுவதுடன் அதன் உண்மையான சுவையும் உணவில் சேராது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்தானது நமது உடலுக்கு அவசியம் தேவை. ஆனால், இவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் மாவுச்சத்தானது சர்க்கரையாக மாறிவிடும். எனவே உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். மேலும் வெங்காயம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் அவற்றை ஒரே ஒரு முறை குளிர் சாதன பெட்டியில் வைத்து விட்டு எடுத்து விடலாம்.
ரொட்டி துண்டு
பொதுவாக ரொட்டி துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் ஆரோக்கியம் கெட்டு விடாது. ஆனால், ரொட்டியின் தோற்றம் நன்கு இறுக்கம் அடைந்து கெட்டியானதாக மாறி அதனை உண்பதற்கு ஏற்றது இல்லாததாக மாற்றி விடும்.
வாழைப்பழம்

மேலும், மிதமான காலநிலை உள்ள பகுதிகளில் வாழைப்பழங்கள் விளைவதால், அதற்கு அதிகப்படியான குளிர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.
பூண்டு

ஃபிரிட்ஜில் பூண்டு வைக்கப்பட்டால் அதன் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும். பூண்டை பாதுகாக்க வேண்டும் என்றால், மிதமான குளிர் மற்றும் இருட்டான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.
எண்ணெய்
எண்ணெய்யை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் நிலைத்தன்மை மிகவும் கெட்டியாக மாறிவிடும். பிறகு, அதனை சமைப்பது மிகவும் கடினமாகும்.
கொப்பி பொடி

கொப்பி பொடியை குளிர் சாதனை பெட்டியில் வைத்தால் அதன் சுவை மாறுவதுடன், குளிர்சாதன பெட்டியின் வாசத்தை எடுத்துக்கொண்டு அதை போன்ற சுவையை மட்டுமே கொடுக்கும். உண்மையான கொப்பியின் சுவை இருக்காது.
அவோகடோ
வெண்ணெய் பழம் எனப்படும் அவோகடோவும் வாழைப்பழமும் ஒன்று தான். இரண்டையும் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அவை நன்றாக பழுக்காது.
தேன்