காலாண்டு விடுமுறையில் பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி
பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு மாணவர்கள், 'நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவதற்கு, பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.
இதற்கு, தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால்,அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களால், தனியார் மையங்களில் சேர முடியவில்லை.எனவே, இவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், 412 மையங்களில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அந்த, 10 நாட்களும், நீட் சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும், நீட் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 6,000 பள்ளிகளை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், காலாண்டு தேர்வு விடுமுறையில், நீட் பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது