பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் தர வேண்டும்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

'பகுதி நேர, பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு, தொகுப்பூதியம் வழங்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், 46 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், காலியான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,700க்கும் மேற்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து, பாடங்கள் நடத்தப்படுகின்றன.பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பாட அடிப்படையில், மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.


ஆண்டுக்கு, ஏழு மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும்.மீதமுள்ள காலங்களில், தேர்வு பணி, விடைத்தாள் திருத்த பணிகளுக்கு சென்றால், அவர்களுக்கு ஓரளவு ஊதியம் கிடைக்கும். இல்லையெனில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, எந்த ஊதியமும்கிடைக்காது.எனவே, பகுதி நேர, பாலிடெக்னிக் ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உடனே, அது சாத்தியமில்லை என்றால், தொகுப்பூதியமாக, மாதம், 30 ஆயிரம் ரூபாய் வழங்க, அரசு முன் வரவேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.