பல்கலை துணைவேந்தர் பதவி விண்ணப்பிக்க அழைப்பு


சென்னை, :வேளாண் பல்கலையில், புதிய துணை வேந்தர் நியமனத்துக்கு, தேடல் குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் துணை வேந்தராக உள்ள, கே.ராமசாமியின் பதவி காலம், இந்த ஆண்டு, நவம்பரில் முடிகிறது. எனவே, புதிய துணை வேந்தரை நியமிக்க, அரசின் சார்பில் தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.துணை வேந்தர் பதவிக்கான, தமிழக அரசு நிர்ணயித்த தகுதிகள் குறித்த விபரங்கள் மற்றும் விண்ணப்ப வடிவம் ஆகியன, வேளாண் பல்கலையின், www.tnau.ac.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பங்களை, அக்., 12ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தேடல் குழு அறிவித்துள்ளது.