தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்,
2019 ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள்,
கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக்
பொருட்களை பயன்படுத்துவதற்கு, ஜன., 1 முதல், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக, தமிழக பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து பள்ளிகளிலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 15ம் தேதி முதல், இந்த தடை அமலுக்கு வருகிறது.
'பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி வளாகம்' என்ற, பெயர் பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.