மாணவர்களுக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட்!

கொல்கத்தாவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச குடை வழங்க அம்மாநகராட்சி அறிவித்துள்ளது.


 
அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில அரசுகள் அவர்களுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றன. மாணவர்களுக்குச் சத்துணவு, புத்தகம், பை, சீருடைகள், ஷூக்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றன.
 
இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகராட்சி மாணவர்களுக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளது.
கோடைக்கால வெயிலில் இருந்து மாணவர்கள் தப்பிக்கவும், மழைக்காலத்தில் மாணவர்களின் வருகை குறைவைத் தடுக்கும் வகையிலும், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.