செப் .7ல் தமிழக அரசின் இலவச, 'நீட்' பயிற்சி துவக்கம்

தமிழக அரசின் இலவச, 'நீட்' பயிற்சி,
நாளை மறுநாள் துவக்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர் களும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவ படிப்பில் சேரும் வகையில், இலவச நீட் பயிற்சியை, தமிழக அரசு வழங்குகிறது. இந்தத் திட்டம், 2017 - 18ல், துவக்கப்பட்டது. 


இதில், பயிற்சி பெற்ற மாணவர்களில், 20க்கும் மேற்பட்டோர், மருத்துவ கல்லுாரிகளில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அதனால், நடப்பு கல்வியாண்டில், இன்னும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் வகையில், முன்கூட்டியே, நீட் சிறப்பு பயிற்சி துவக்கப்படுகிறது. இதையடுத்து, நீட் பயிற்சி, தமிழகம் முழுவதும், நாளை மறுநாள் துவக்கப்பட உள்ளது. மொத்தம், 412 மையங்களில், 4,000 ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.