தயார் நிலையில் 2ம் கட்ட புதிய பாடத்திட்டம்

மதுரை: "தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் - 2விற்கான புதிய பாடத்திட்டங்கள் டிசம்பரில் வெளியாகும் வாய்ப்புள்ளது," என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன்
தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: பள்ளி கல்வித்துறையில், 6, 9, 10 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1க்கு புதிய பாடத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிகிறது. ஆசிரியர்களுக்கு தான், சவாலாக இருக்கும்; மாணவர்களுக்கு இருக்காது. முறையான பயிற்சியால், ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் எளிதாகி விடும். இரண்டாம் கட்டமாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு டிசம்பரில் வெளி வரவுள்ளது. அமைச்சர், அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புதிய பாடத்திட்டங்களால் இரண்டு ஆண்டுகள் வரை, ஆசிரியர்கள் பிரத்யேகமாக பயிற்சி பெற வேண்டும். பாடம் நடத்துவதற்கு நேரம் இல்லை, என ஆசிரியர்கள் தெரிவிக்க கூடாது. திட்டமிட்டு உரிய காலத்திற்குள், பாடத்தை நடத்தி முடிக்க வேண்டும். அலுவலக பணிக்கு ஆசி ரியர்களை ஈடுபடுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.