செல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்! #GoodParenting

போன் வழியாக நல்லவற்றைப் பார்க்க ஆரம்பித்துவிட்ட பிள்ளைகள், அதன்பின் தீயவற்றை அவர்களாகவே இனம்கண்டு புறம் தள்ளிவிடுவார்கள்.

வீட்டுப்பாடம், டைம் டேபிள், எக்ஸாம் சார்ட் எல்லாமே இப்போது பள்ளியின் வாட்ஸ்அப் குரூப் வழியே வர ஆரம்பித்துவிட்டன. அதனால், 8-ம் வகுப்பு அல்லது 9-ம் வகுப்பிலேயே பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித்தருவது தவிர்க்க முடியாததாகி ஆகிவிட்டது. அப்படிக் கொடுத்துவிட்டு, 'எப்போ பாரு போனையே பார்த்துட்டிருக்கியே' எனத் திட்டுவதில் நியாயம் இல்லை

ஏனென்றால், முதல்முறையாக தனக்கென ஒரு போன் கிடைத்ததும் பிள்ளைகள் அதன்மீது பெரும் ஈடுபாட்டுடனே இருப்பார்கள். அதற்காக, எப்போதும் மொபைலுடன் இருப்பதை வேடிக்கையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பிள்ளைகள் போனில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும்; சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்; ஒருவேளை, எதிர்பாராத பிரச்னை ஒன்றில் பிள்ளைகள் மாட்டிக்கொண்டால், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சரி, இதையெல்லாம் எப்படிச் செய்வது? டிப்ஸ் தருகிறார், உளவியல் நிபுணர் ஜெயந்தினி.
 


டிப்ஸ்
கண்காணியுங்கள்...