EMIS பதிவு, 31ம் தேதி கடைசி

அரசு உதவி பெறும் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி வாரியாக மாணவர்களின் விபரங்கள், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன. 


அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின், எமிஸ் மாணவர் சேர்க்கை விபரங்கள், பள்ளிக்கல்வி நிர்வாக இணையதளத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித்துறை கெடு விதித்துள்ளது.குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், மாணவர்களின் விபரங்கள், எமிஸ் பதிவு வழியாகவே எடுக்கப்படும் என்பதால், விபரங்களை தவறின்றி பதிவு செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.