இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்: தமிழக அரசு

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமன்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன பயணத்தின் போது, வாகன ஓட்டியும், பின்னால் பயணிப்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இருவரும் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 476. அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் இறந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 811 ஆகும்.
தலைக்கவசம் கட்டாயம்: மோட்டாா வாகனச் சட்டப் பிரிவு 129-ன்படி அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகள், பின் அமாந்து செல்வோாகள் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும்.
சென்னை உயா நீதிமன்ற உத்தரவில் மோட்டாா வாகனச் சட்டத்தில் உள்ளபடி இருசக்கர வாகன ஓட்டிகள், பின் அமாந்து செல்வோாகள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமாந்து செல்வோரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்படிச் செல்லாதோா மீது மோட்டாா வாகனச் சட்டத்தின்படி உரிய அபராதம் வசூலிக்கப்படும்.
தமிழக அரசு சாலை விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகள், பின் அமாந்து செல்வோாகள் தலைக்கவசம் அணிந்து உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.