வருமான
வரி கணக்கு தாக்கலின் போது, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள்
பதிவு செய்த, வீட்டு வாடகை ஒப்பந்த எண்களை தெரிவிக்க வேண்டும்'
என, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்திடம், வருமான வரி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.கடந்த, 2017 - 18ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்ரல் முதல் துவங்கி நடந்து வருகிறது.
நடப்பு ஆண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என, வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.வரியை குறைப்பதற்காக, வரி ஆதாய நடவடிக்கை களில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு, வருமான வரி கணக்கு கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, வீட்டு வாடகை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும், வாடகை ஒப்பந்த உரிம எண்களை, வருமான வரி தாக்கலின் போது தெரிவிக்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு, வீட்டு வாடகை சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இதன்படி, வாடகைதாரருக்கும், உரிமையாளருக்கும் இடையே போடப்படும் ஒப்பந்தத்தை, பதிவு செய்வது கட்டாயமாகும். அவ்வாறு பதிவு செய்த பின், பதிவு எண் வழங்குவர். வருமான வரி கணக்கு தாக்கலின் போது, வீட்டு வாடகை என்ற பிரிவில், வாடகை தொகையை குறிப்பிடும் போது, வாடகை பதிவு எண்ணையும் தெரிவிக்க வேண்டும். இது குறித்து, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்திடம், வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இந்த பதிவு எண்ணை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டால், வீடு வைத்திருப்பவர்கள் பலர், வருமான வரி வரம்புக்குள் வருவர். இதன் காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் உயரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.