Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 27, 2018

பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச புத்தகம், கணித பாட உபகரணம், கலர் பென்சில், புத்தகப்பை, காலணி இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, மாணவர் வருகை அடிப்படையில், அரசின் கல்வி உபகரண பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, 1ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வரை படிக்கும், 72 லட்சத்து, 55 ஆயிரம் மாணவ - மாணவி யருக்கு புத்தகப்பை; 1 - 10ம் வகுப்பு படிக்கும், 58 லட்சம் பேருக்கு காலணி; 3 - 5ம் வகுப்பு படிக்கும், 15 லட்சத்து, 15 ஆயிரம் பேருக்கு, கலர் பென்சில்; 6 - 10 வரை படிக்கும், 16 லட்சத்து, 16 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, ஜியாமெட்ரி பாக்ஸ் வழங்க, கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவி யருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி, அடுத்த இரு மாதங்களில் துவங்கும்' என்றனர்.

No comments:

Post a Comment