63 இன்ஜி., கல்லூரிகள் நடப்பாண்டில் மூடல்?

மாணவர்கள் சேர்க்கை குறைந்ததன் காரண மாக, தமிழகத்தில், 63 இன்ஜினியரிங் கல்லுாரி கள் மூடும் நிலையில் உள்ளதாக, அண்ணா பல்கலை தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.
63, இன்ஜி., கல்லூரிகள் , நடப்பாண்டில், மூடல்?


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, அண்ணா பல்கலை வழியாக, பொது கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, மாணவர்களை, சென்னைக்கு வரவழைக்காமல், 'ஆன்லைன்' முறையில், அவர்கள் விரும்பிய கல்லுாரியில், இடங்களை தேர்வு செய்ய, வசதி செய்யப்
பட்டது.இதற்காக, மாநிலம் முழுவதும், 42 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.


கவுன்சிலிங்கை, 'ஆன்லைன்' வழியாக நடத்து வதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், பெரிய சர்ச்சையின்றி, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பொது கவுன்சிலிங்கில், 72 ஆயிரத்து, 648 இடங்கள் உட்பட, தொழிற்கல்வி, விளையாட்டு மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளையும் சேர்த்து, 74 ஆயிரத்து, 601 இடங்களே நிரம்பியுள்ளன. 97 ஆயிரத்து, 980 இடங்கள், மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன.


மொத்தம், 136 கல்லுாரி கள் மட்டுமே, 50 சதவீத இடங்களை, கவுன்சிலிங் வழியாக நிரப்பியுள்ளன. மற்ற கல்லுாரிகளில், சேர்க்கை அளவு சரிந்து உள்ளது. எனவே இனி, கல்லுாரிகளை தொடர்ந்து நடத்த முடியுமா என, தனியார் கல்லுாரி நிர்வாகங் கள், ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் போது, 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள் இருப்பதாக,அண்ணா
பல்கலை கூறியிருந்தது. -தற்போது, 487 கல்லுாரிகள் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து, 63 கல்லுாரிகள் மூடப் படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


மேலும்,இந்த ஆண்டு,47 கல்லுாரிகளில், வெறும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே, மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எனவே, இந்த கல்லுாரிகளும், இந்த ஆண்டு மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.- நமது நிருபர்