மருத்துவ படிப்புகளுக்கு 23ல் இறுதி கவுன்சிலிங்

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங்
முடிந்துள்ளது. இறுதி கட்ட கவுன்சிலிங், இன்றும், 23ம் தேதியும் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 21 எம்.பி.பி.எஸ்., - ஒன்பது, பி.டி.எஸ்., இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால், மாணவர் சேர்க்கை, 23ம் தேதி, ஒரு நாள் மட்டும் நடத்தப்படும் என, மருத்துவ தேர்வு குழு செயலர், செல்வராஜன் தெரிவித்து உள்ளார். மேலும், விபரங்களை, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.