'மருத்துவ கல்லூரிகளில் 2019ல் கூடுதல் இடங்கள்'

கோவை : ''தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதல் மாணவர்களை சேர்ப்பதற்கான ஒப்புதல், வரும் கல்வி யாண்டில் கிடைக்கும்,'' என, மருத்துவக் கல்வி
இயக்குனர் எட்வின் ஜோ கூறினார்.கோவையில் அவர் அளித்த பேட்டி: மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லுாரி என்ற அடிப்படையில், மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்டங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு, 60 சதவீதம், மாநில அரசு, 40 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளன. இதன் மூலம், மதுரை மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரிகளில், 100 இடங்களை அதிகரிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பின், கோவை, கன்னியாகுமரி மருத்துவக் கல்லுாரிகளில், 100 மருத்துவ இடங்களை அதிகரிக்க, ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. எம்.பி.பி.எஸ்., காலியிடங்களுக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. இதில், அனைத்து இடங்களும் நிரப்பப்படும். காசநோயை வரும், 2025க்குள் ஒழிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.