
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவால் இன்று மாலை 05.05. மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.
உடல் நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வாஜ்பாய் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் தில்லியில் கூடி முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கிறது.
வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் பழனிசாமி நாளை தில்லி செல்கிறார்.