SCHOOL MORNING PRAYER ACTIVITIES – 27.07.2018 ( DAILY UPDATES… )

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

 
திருக்குறள்:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
பழமொழி :
A sound mind in a sound body
உடல் வலுவுற்றால், உள்ளம் வலுவுறும்
 
பொன்மொழி:
மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
வள்ளலார்.
 
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?
கிரேஸ் கோப்பர்
2.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?
மீஞ்சூர்
 
நீதிக்கதை :
இரண்டு முட்டாள் ஆடுகள்
(Two Silly Goats Moral Story in Tamil)
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.
அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.
முதலாவது ஆடுஎனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்என்றது. உடனே, இரண்டாவது ஆடுநான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.
ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.
நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.
1
இன்றைய செய்தி துளிகள் :
1.வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிக்கை
2.சமூக வலைத்தளங்களை தேசவிரோத செயலுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர் எச்சரிக்கை
3.சந்திர கிரகணத்தையொட்டி இன்று இரவு ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருப்பதி கோயில்களில் நடை சாத்தப்படுகிறது
4.’ஆசியாவின் நோபல்எனப்படும் மகசேசே விருதுக்கு இந்தியர்கள் இருவர் தேர்வு


5.பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான யூத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 128.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.