தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் வகுப்புகள் நடத்தக் கூடாது: மெட்ரிக் இயக்ககம் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் புதனன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.
அதேசமயம் எந்த ஒரு நீட் சிறப்பு வகுப்பிலும் சேருமாறு மாணவர்களை பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது.
அதேநேரம் நீட் சிறப்பு வகுப்புகளுக்கு என்று மாணவர்களிடம் பள்ளிகள் சிறப்பு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!