கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா? அண்ணா பல்கலைகழகம் மறுப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில் ஏற்பட்ட திடீர் பின்னடைவால் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை விடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. 

உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என பரவிய தகவலுக்கு அண்ணா பல்கலைகழக மறுப்பு தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும், இது வெறும் வதந்தி தான் எனவும் அண்ணா பல்கலை.,யின் பதிவாளர் கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.