தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நாளை முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங்

தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு, நாளை முதல் மூன்று நாட்களுக்கு, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்கிறது.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையில், பல்வேறு கட்டமாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சிறப்பு பிரிவுகளுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, நேற்று இட ஒதுக்கீடு நடந்தது. இன்று, விளையாட்டு பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதையடுத்து, நாளை முதல் மூன்று நாட்களுக்கு, தொழிற்கல்வி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். இதில், அண்ணா பல்கலையின் சென்னை வளாகம் மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரிகளில் இடங்கள் வழங்கப்படாது. மற்ற கல்லுாரிகளில் மட்டும், இட ஒதுக்கீடு தரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொழிற்கல்வியில், 1,692 பேர், கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.