அண்ணா பல்கலையில் புத்தக கண்காட்சி

அண்ணா பல்கலையில், புதிய தொழில்நுட்ப புத்தகங்கள் அடங்கிய, புத்தகக் கண்காட்சிதுவங்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலையின், கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் உள்ள நுாலகத்தில், பல்வேறு வகை
தொழில்நுட்பபுத்தகங்கள் உள்ளன.அவற்றை, பல்கலை மற்றும் இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்தலாம். 


இந்நிலையில், அனைத்து, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் மாணவர்கள், தங்களுக்கு தேவையான தொழில்நுட்ப புத்தகங்களை வாங்கும்வகையில், புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலையின் பதிவாளர், கணேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், துணை வேந்தர் எம்.கே.சுரப்பா, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார்.இன்றும், நாளையும் புத்தக கண்காட்சி நடக்கும். 48 புத்தக பதிப்பாளர்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்பிலான தொழில்நுட்ப புத்தகங்களை, விற்பனைக்கு வைத்துள்ளனர்.'கல்லுாரிகள், மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்' என, பல்கலை துணைவேந்தர் சுரப்பா கூறினார்.