கால்நடை மருத்துவம், பி.டெக்., அனைத்து இடங்களும் நிரம்பின

சென்னை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடந்த, கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான அனைத்து
இடங்களும் நிரம்பின.கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, வேப்பேரில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரியில் மூன்று நாட்கள் நடந்தது. இதில், கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு படிப்பில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 306 இடங்களும் நிரம்பின.பி.டெக்., படிப்பில், உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் போன்ற படிப்புகளுக்கு, 94 இடங்கள் உள்ளன.சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், ஆறு இடங்கள் நிரம்பிய நிலையில், மீதமுள்ள, 88 இடங்களுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இதில், 126 மாணவர்கள் பங்கேற்றனர். கவுன்சிலிங் முடிவில், 88 இடங்களும் நிரம்பின.கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்ற மாணவர்கள், ஆகஸ்ட், 6க்குள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும்.தவறினால், அவர்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த இடம், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும் என, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.