'செல்வமகள்' திட்டத்தில் சேர ரூ.250 போதும்!

தபால் நிலையங்களில், பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய உதவும், 'செல்வமகள்' சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு துவக்க, குறைந்தபட்ச, 'டிபாசிட்' தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.பெண்
குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய உதவும் வகையில், 'சுகன்யா சம்ரிதி யோஜனா' எனப்படும், செல்வ மகள் சேமிப்பு திட்டம், மத்திய அரசால், 2015, ஜனவரியில் துவக்கப்பட்டது.


ரூ.1.26 கோடிஇந்த திட்டத்தில், 2017, நவம்பர் வரை, 1.26 கோடி கணக்குகள், பெண் குழந்தைகள் பெயரில் துவக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரத்து, 183 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்திருந்தது.இந்த திட்டத்தில் கணக்கு துவக்க, குறைந்தபட்ச டிபாசிட் தொகை, 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு, பிற சிறுசேமிப்பு திட்டங்களை போல், ஒவ்வொரு காலாண் டிலும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும்.நடப்பு, ஜூலை - செப்டம்பர் இடையிலான காலாண்டில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழான வட்டி விகிதம், 8.1 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

செல்வமகள் திட்டத்தில், பெண் குழந்தைக்கு, 10 வயது ஆகும் வரை, அந்த குழந்தையின் பெயரில், பெற்றோர் அல்லது காப்பாளர், கணக்கை துவக்கலாம். தபால் நிலையங்களிலும், குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்படுகின்றன.குறைப்புஇந்த திட்டம், கணக்கு துவக்கப்பட்டது முதல், 21 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பின், திட்டம் முதிர்வு பெற்று, அதில் கிடைக்கும் பணம், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வழங்கப்படும்; முதிர்வு தொகைக்கு, முழு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

இந்நிலையில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவக்குவதற்கான குறைந்தபட்ச தொகை, 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் பின், ஒவ்வொரு ஆண்டும், செய்யக்கூடிய குறைந்தபட்ச, 'டிபாசிட்' தொகையும், 1,000 ரூபாயி லிருந்து, 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்சமாக, 1.50 லட்சம் ரூபாய் வரை, 'டிபாசிட்' செய்யலாம்.