*2018 சூலை16 : CPS வல்லுந‌ர்குழுவின் உண்மை நிலை - திண்டுக்கல் எங்கெல்ஸ்*

பிப்ரவரி 2016-ல் தமிழ்நாடு அரசுஊழியர் சங்கமும் தமிழ்நாடுஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணியும் இணைந்து நடத்தியகாலவரையற்றவேலைநிறுத்தத்தின் பலனாகஅப்போதைய முதல்வர் 110 விதியின்கீழ்பழைய ஓய்வூதியத் திட்டத்தைநடைமுறைப்படுத்திட வல்லுநர் குழு
அமைக்கும் அறிவிப்பை 19.02.2016ல்அறிவித்தார்.

🔥
🛡 இதனையடுத்து, 26.02.2016அரசாணை எண்:65-ன்படிதிருமதி.சாந்தசீலாநாயர்தலைமையில் வல்லுநர் குழுஅமைக்கப்பட்டது

🔥
🛡 அதன் பின்னர்,
28.07.2016,
14.11.2016,
02.03.2017
ஆகிய தேதிகளில் காலநீடிப்புசெய்யப்பட்ட வல்லுநர்குழுவில்இருந்து திருமதி.சாந்தசீலாநாயர்30.03.2017-ல் விலகினார்.

🔥
🛡 இதனைத் தொடர்ந்து திரு.ஸ்ரீதர்தலைமையில் வல்லுநர் குழுவைஅமைத்து, 03.08.2017,
14.12.2017,
04.01.2018,
15.02.2018
ஆகிய தேதிகளில் காலநீட்டிப்புசெய்யப்பட்டது.

🔥
🛡 இவ்வாறாக இருமுறைதலைமைப் பொறுப்பையும் 7-முறைகாலநீட்டிப்பையும் பெற்ற வல்லுநர்குழுவின் காலம் இறுதியாகவெளியிட்ட அரசாணையின்படி31.03.2018 அன்றேகாலாவதியாகிவிட்டது.

🔥
🛡 இதனிடையேஜாக்டோ-ஜியோசார்பில் செப்டம்பர் 2017-ல்நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தின்போது சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் நடந்த வழக்குவிசாரணையில், 30.11.2017-ற்குள்வல்லுநர் குழுவின் அறிக்கைபெற்று அரசு ஊழியர்கள் &ஆசிரியர்களின் கோரிக்கைபரிசீலிக்கப்படுமென தமிழகஅரசின் தலைமைச் செயலர்திருமதி.கிரிஜா வைத்தியநாதன்அவர்கள் நேரில் ஆஜராகிபதிலளித்தார்.

🔥
🛡 தற்பொழுதோ வல்லுநர் குழுவின்காலம் முடிவிற்கு வந்து 100நாட்களுக்கும் மேலானநிலையிலும்இதுவரையில்அரசிடம் அறிக்கைசமமர்ப்பிக்கப்படவில்லை என்பதும், 31.03.2018-ற்குப் பின்னர் காலநீட்டிப்புசெய்யப்படவில்லை என்பதும்தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட கடிதம் வாயிலாகவெளிவந்துள்ளது.

🔥
🛡 16.07.2016-ல் தமிழ்நாடுஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணியின் திருநெல்வேலிமாவட்டச் செயலாளர் அவர்கள்தினகரன் நாளிதழுக்கு அளித்தசெய்தியைத் தற்போதைய சூலை-16செய்தியெனக் கருதி பல்வேறுசமூக வலைதளங்களில்தொடர்ச்சியாகப் பலர் பகிர்ந்துவருகின்றனர்மேலும்மற்றுமொருசெய்தியாக PAY MATRIX-உடன்ஒப்பிட்டும் மேலுமொரு செய்தியும்தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.இதுவும் உறுதிப்படுத்தப்படாதமற்றும் பொருத்தமற்ற செய்தியே.

🔥
🛡 இவ்வாறான தவறான / காலத்தொடர்பற்ற செய்திகளைப் பரப்பிஊழியர்கள் மத்தியில் உள்ளபோராட்டக் குணத்தை முடங்கச்செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்துவருவதும்அதன் உண்மைத்தன்மையை விசாரியாது கல்விசார்வலைதள நிர்வாகிகள் தொடர்ந்துதமிழகம் முழுக்கப் பரப்பி வருவதும்வேதனை தரும் செயலாகவேஉள்ளதுஇனியேனும் இது போன்றதகவல்களைப் பகிர்வோரும்பரப்புவோரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

🔥
🛡 CPS வல்லுநர் குழு காலாவதியாகி100 நாள்களைக் கடந்துவிட்டசூழலில் உள்ளபடியே அறிக்கையைவெளியிட வைக்கவும்,அவ்வறிக்கையில் நமக்கானஉரிமைப்பறிப்பு அதிகார மட்டத்தில்நியாயப்படுத்தப்பட்டு இருப்பின்அதைத் தகர்த்துநமக்கானஓய்வூதிய உரிமையை முழுமையாகமீட்டெடுக்கத் தேவை வலிமையானதொடர் & கூட்டுப் போராட்டங்கள்மட்டுமே.

🔥
🛡 எனவே, CPS-ன் பாதிப்பில் உள்ளநாம் அனைவரும் நமது உரிமைவேட்கையைத்தணியவிட்டுவிடாதபடி பொந்திடைவைத்த அக்கினிக் குஞ்சுகளாகக்காத்திருப்போம்!

_தோழமையுடன்,_
*திண்டுக்கல் எங்கெல்ஸ்.