மருத்துவ படிப்பு : இன்று கடைசி நாள்

சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு மற்றும் தனியார் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. கடைசி நாளான நேற்று, அரசு மருத்துவ இடங்களுக்கு, 798; தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 512 என, 1,310 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. எட்டு நாட்கள் நடைபெற்ற விண்ணப்ப வினியோகத்தில், அரசு இடங்களுக்கு, 24 ஆயிரத்து, 933; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 13 ஆயிரத்து, 338 என, 38 ஆயிரத்து, 271 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு, 43 ஆயிரத்து, 206 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய, இன்று கடைசி நாளாகும்.இது குறித்து, தேர்வுக் குழு செயலர் செல்வராஜன் கூறுகையில், ''இதுவரை, 36 ஆயிரத்து, 304 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
''சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, திட்டமிட்டப்படி, ஜூன், 28ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை, 1 முதல், 5 வரை, முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும்,'' என்றார்.