‘நீட்’ தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வை எழுதுவதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான வயது வரம்பு 25 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த வயது வரம்பை உயர்த்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக விரிவான பதில் அளிக்குமாறு கோரி மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.