'ஜாக்டோ - ஜியோ' சார்பில் இன்று முதல் உண்ணாவிரதம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், இன்று முதல், காலவரையற்ற போராட்டம் நடத்தப்படுகிறது.


 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டா - ஜியோ அமைப்பினர், தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக, ஜாக்டோ - ஜியோ சார்பில், காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.

 மாவட்ட தலைநகரங்களில் இன்று முதல், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்
படுகிறது.