மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம். மேலும், www.tnhealth.org என்ற, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம்செய்தும் பயன்படுத்தலாம். 


மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்காக, 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 18ம் தேதிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.